உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோவிலில் நாளை நவராத்திரி நான்காம் நாள்!

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை நவராத்திரி நான்காம் நாள்!

மதுரை: நவராத்திரி நான்காம் நாளில், மதுரை மீனாட்சி ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி தருகிறாள். திருமலை நாயக்கர் காலத்தில், குமரகுருபரர் மதுரை வந்தார். பிறக்கும் போதே பேச முடியாத அவர், திருச்செந்துார் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றதை மன்னர் கேள்விப்பட்டார். அவரிடம், மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடும் படி வேண்டினார். மன்னரின் முன்னிலையில், குமரகுருபரர் பிள்ளைத்தமிழை அரங்கேற்றினார். அதன் இனிமையில் ஈடுபட்ட அம்பிகை, சிறுமி வடிவில் தோன்றினாள்.

மன்னரின் கழுத்தில் இருந்த முத்து மாலையைக் கழற்றி, குமரகுருபரருக்கு அணிவித்து சன்னிதிக்குள் சென்று மறைந்தாள். அன்னையின் அருளை எண்ணி அனைவரும் வியந்தனர்.
சிறுமியாக வந்த மீனாட்சி ஊஞ்சலில் ஆடும் அழகினை குமரகுருபரர் ஊசல்(ஊஞ்சல்) பருவ பாடலில் வர்ணித்து மகிழ்ந்தார். இக்கோலத்தை தரிசித்தால் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.

நைவேத்யம்: அவல் கேசரி, பால் பாயாசம், கல்கண்டு சாதம், பட்டாணி சுண்டல்

பாடல்: ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமாய்
வானந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !