உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்வாடி புதையலில் சிக்கிய ஆக்ரோஷ காளி அம்மன் சிலை : 17 ம் நூற்றாண்டை சேர்ந்தது!

ஏர்வாடி புதையலில் சிக்கிய ஆக்ரோஷ காளி அம்மன் சிலை : 17 ம் நூற்றாண்டை சேர்ந்தது!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஏர்வாடியில் புதைப்பொருளாக, 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த ஆக்ரோஷ காளி அம்மன் கற்சிலை கிடைத்துள்ளது.

இந்த சிலை தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சில மாதங்களுக்கு முன் புதையலாக கிடைத்துள்ளது. இதனை வருவாய்த்துறையினர் ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். சிலையில் காளி அம்மன் முகம் ஆக்ரோஷமாக இருக்கிறது. தலையின் மேற்பகுதியில் கிரீடமாக எலும்புகூடு வடிவம், காலில் மகிஷாசுரனை வதம் செய்தபடியும் உள்ளது. நான்கு கைகள் உள்ளன. மேல் வலது கையில் பாம்பு, கீழ் கையில் உடுக்கை, மேல் இடது கையில் சூலாயுதம், கீழ் கையில் ரத்தம் பிடிக்கும் பாத்திரம் உள்ளன. கழுத்தில் ஆபரணங்கள் உள்ளன. உயரம் ஒன்றரை அடி, நீளம் 10 அங்குலம், அகலம் 9 அங்குலம் உள்ளது.

காப்பாட்சியர் சவுந்திரபாண்டியன் கூறியதாவது: காளி சிலை 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது. சிலையில் எந்தவித சேதமும் இல்லை. சிலையை மக்களின் பார்வைக்காக வைத்துள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !