உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் கோலாகலம் நவராத்திரி பிரம்மோற்சவம் துவங்கியது

திருமலையில் கோலாகலம் நவராத்திரி பிரம்மோற்சவம் துவங்கியது

திருமலை: திருப்பதியில் நடைபெறும் விழாக்களிலேயே மிக முக்கியமான விழா நவராத்திரி பிரம்மோற்சவ விழாவாகும். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் போது உற்சவரான மலையப்பசுவாமி காலையும், இரவும் விதவிதமான வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்த வருட நவராத்திரி பிரம்மோற்சவம் புதன்கிழமை இரவு துவங்கியது. மலையப்பசுவாமி தேவியருடன் பெரிய சேஷ வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாடவீதிகளில் சுவாமி வலம்வரும் போது பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் நடனம் பாட்டு மற்றும் கோலாட்டம் போன்ற கிராமீய நடனங்களை ஆடிப்பாடியபடி சுவாமிக்கு சென்றனர். மாடவீதிகளில் காத்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனத்தை பெற்றதுடன் கலை விழாக்களையும் பார்த்த மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !