உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உசிலம்பட்டி கோயில்களில் நவராத்திரி விழா துவங்கியது

உசிலம்பட்டி கோயில்களில் நவராத்திரி விழா துவங்கியது

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கோயில்களில் நவராத்திரியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு துவங்கியது.

மேலப்புதூர் பத்ரகாளியம்மன் கோயிலில் கொலு வைக்கப்பட்டு அம்மன் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். அருணாசலம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் கொலுவுடன் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருவள்ளுவர் நகர் தேவிகருமாரியம்மன் கோயிலிலும், உசிலம்பட்டி திருமுருகன் கோயிலிலும் முதல்நாள் அம்மன் மீனாட்சியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !