வரதராஜபெருமாள் கோவிலில் பன்னிரு கருட சேவை நாளை துவங்குகிறது!
ADDED :3702 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் சாத்துக்கூடல் ரோடு, வரதராஜபெருமாள் கோவிலில் 17ம் ஆண்டு பன்னிரு கருட சேவை நாளை (17ம் தேதி) முதல் துவங்குகிறது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம், சாத்துக்கூடல் ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் 17ம் ஆண்டு கருட சேவை நாளை (17ம் தேதி) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. அதில், விருத்தாசலம், பெரியார் நகர் ராஜகோபால சுவாமி, ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள், வண்ணாங்குடிகாடு வரதராஜ பெருமாள், எலவனாசூர்கோட்டை ராஜநாரயண பெருமாள் உட்பட 25 கோவில்களில் இருந்து வரும் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து, 18ம் தேதி காலை 8:00 மணியளவில் வாசவி மகாலில் வைணவ மாநாடு நடக்கிறது.