உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் மெகா கொலு!

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் மெகா கொலு!

சிதம்பரம்: நவராத்திரி உற்வத்தையொட்டி பொது தீட்சிதர்கள் சார்பில் நடராஜர் கோவிலில் மெகா கொலு வைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. இதனையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.  இதனையொட்டி சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் ஆயிரங்கால் மண்டபத்தில் நவராத்திரி மெகா கொலு அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. மெகா கொலுவில் ‘அனைத்து ஜீவ ராசிகளும் கடவுள்’ என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவில் 9 கிரகங்கள், 12 ராசிகள் அடிப்படையில் 21 படிகள் அமைத்து, விநாயகர் முதல் அனைத்து விதமான சுவாமி, அம்மன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலு உற்சவம் 9 நாட்களுக்கு தினமும் சிறப்பு பூஜை நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !