உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விழாவில் மஞ்சள் அலங்காரத்தில் லிங்க பைரவி!

நவராத்திரி விழாவில் மஞ்சள் அலங்காரத்தில் லிங்க பைரவி!

கோவை: ஈஷா யோகா மையத்தில், நவராத்திரி விழாவில் நேற்று, லிங்கபைரவி மஞ்சள் அலங்காரத்தில் காட்சியளித்தார். அக்., 13 முதல், 21 வரை ஒன்பது நாட்களுக்கு, நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதில், நான்காம் நாளான நேற்று, மாதவப்பெடி மூர்த்தி குழுவினரின் குச்சிப்புடி நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வல நிகழ்ச்சி நடந்தது.இதில், தியானலிங்கம் முன் நடந்த ஆர்த்தியில், நெருப்பு நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. நவராத்திரி விழாவை முன்னிட்டு, முதல் மூன்று நாட்களுக்கு லிங்கபைரவி தேவி, குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முதல், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மஞ்சள் அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கடவுள் அருள் பெற்றனர். இறுதியில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !