முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் நவராத்திரி விழா!
ADDED :3644 days ago
சிங்கம்புணரி: முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் நவராத்திரி விழா 10 நாள் நடக்கிறது.கோயில் வளாகத்தில் பர்ணக சாலையில் மீனாட்சி அம்மன் கொலு வீற்றிருக்கிறார். அன்னபூரணி, ஆயர்பாடியில் கிருஷ்ணர் வெண்ணெய் திருடுதல், சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 9 நாட்கள் உபயதாரர்கள் சார்பில் இரவு சிறப்பு பூஜை ஆராதனை நடக்கிறது. பத்தாம் நாள் அக்.22ல் விஜயதசமியன்று மாலை மீனாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் தேரோடும் வீதி வழியாக வந்து மந்தை திடலில் சூர சம்ஹாரம் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.