கூடல் சுந்தரவேலவர் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :3646 days ago
கூடலூர்:கூடலூர் கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன், மகாலட்சுமி, சரஸ்வதி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுருளிமலை-பழநிமலை பாதயாத்திரை குழு பெண்கள், பஜனைப் பாடல்களை பாடினர். தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது. கோயிலில் வைக்கப்பட்டுள்ள அலங்கார கொலு பொம்மைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கொலு பொம்மைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.