கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி லட்சார்ச்சனை
ADDED :3701 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. திருக்கோவிலூர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு பெண்கள் நவதானியத்தால் கோலமிட்டு, லட்சார்ச்சனை செய்தனர். அம்மன் தான்யலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க, சோட சோபவுபச்சார தீபாராதனை நடந்தது. முரளி சுவாமிகள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். ஆர்ய வைசிய சமூக நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.