உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருந்தலாக்குறிச்சி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை

கருந்தலாக்குறிச்சி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை

சின்னசேலம்: கருந்தலாக்குறிச்சியில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சின்னசேலம் அடுத்த கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்து ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவரை தேரோடும் வீதி வழியாக, ஊர்வலமாக எடுத்து சென்றனர். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !