உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாமரை கோவிலில் சர்வமத சொற்பொழிவு

தாமரை கோவிலில் சர்வமத சொற்பொழிவு

கோவை: செட்டிபாளையம் தாமரை கோவிலில், சர்வ மத சொற்பொழிவு நடந்தது. சொற்பொழிவு ஒவ்வொரு மாதமும், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. நேற்று, பிராணிக் ஹீலிங் குறித்து, இன்ஜினியர் சுப்ரமணியம் பேசுகையில், நம்மிடம் நம்பிக்கை காணப்படவேண்டும். நம்பிக்கை இருந்தால், எத்தகைய நோய்களுக்கும் மருந்து தேவையில்லை. உடற்சக்தியை அதிகரிப்பதால், நோயின் பிடியிலிருந்து எளிதில் குணமடையலாம். ௫௩ லட்சம் கோடி செல்களால் உருவான நம் உடலுக்கு, தேவையான சக்தியை கொடுத்தால், நாம் எவ்வித பிரச்னையுமின்றி, உயிர் வாழலாம், என்றார். கோவில் இயக்குனர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். ஏற்பாடுகளை, கோவில் மேலாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !