கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அக்.,23 ல் அம்புசேர்வை திருவிழா
ADDED :3648 days ago
பு.புளியம்பட்டி : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி அருகே கோவில்புதுாரில், கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், 200 ஆண்டு பழமை வாய்ந்தது. இங்கு, கரிவரதராஜ பெருமாள் நின்ற நிலையில் காட்சி தருகிறார்.இந்நிலையில், வரும், 22ம் தேதி இரவு 1 மணிக்கு, அம்பு சேர்வை திருவிழா துவங்குகிறது. 23ம் தேதி காலை 6 மணிக்கு, புன்செய் புளியம்பட்டி, பிளேக் மாரியம்மன் கோவிலில்,குதிரை வாகனத்தில், கரிவரதராஜபெருமாள் எழுந்தருளி, அம்புசேர்வை நடக்கிறது.காலை 9 மணிக்கு கவாள பூஜையும், மாலை 6 மணிக்கு சுவாமிக்கு பாவாடை பூஜையும் நடக்கிறது.