லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம்
ADDED :3648 days ago
சேலம் : சேலம், செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு, நேற்று நடந்த கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை, ஆகானப்பட்டு தெலுங்கு விஸ்வ பிரமாண மண்டபத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு, நேற்று காலை, கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, புண்யாஹம், விஷ்வக்கேஸனர் ஆராதனம், மஹா மூலமந்ர ஹோமம், அஷ்டலட்சுமி, தன்வந்திரி, ஹயக்ரீவர், பக்ராஜா, ஹனுமான் மூலமந்திர, பூர்ணாஹுதி சாற்றுமுறை, திருமஞ்சனம் ஆகிய வைபவங்கள் நடந்தன. கல்யாண உற்சவத்தை தொடர்ந்து மங்கள ஆராத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை, ரவுத்து நாயுடு இளைஞர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செய்தனர்.