உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

கரூர்: தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் சனிக்கிழமை நடந்த சிறப்பு பூஜையில், சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் பெருமாளை சேவித்தனர். கரூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட, தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில் இயற்கை எழில்மிகுந்த சூழலில் காணப்படும் வரதராஜபெருமாள் கோவிலில், புரட்டாசி மாதந்தோறும், ஒவ்வொரு சனிக்கிழமையும் வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்படி, கடந்த ஐந்து வாரங்களாக, ஒவ்வொரு சனிக்கிழமையிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன. கடைசி வார சனிக்கிழமையன்று பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !