சன்மார்க்க சத்திய சேவா நிலையத்தில் வள்ளலார் அவதார தினம்
ADDED :3665 days ago
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா நிலையத்தில், வள்ளலார் அவதார தினம் கொண்டாடப்பட்டது. ராமநாதன் வரவேற்றார். சன்மார்க்க கொடியை வேங்கடராமன் ஏற்றி வைத்தார். கொடி வணக்க பாடல்களை சிவசங்கர், கார்த்திகேயன், சங்கரபாண்டியன் பாடினர்.இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும் இவ்விழா நடந்தது. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ரங்கநாதன், சங்கரராமநாதன்,சங்கரானந்தம் பேசினர். மருதுபாண்டியன் நன்றி கூறினார்.