உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரன்கோவில் ஆடித் தபசு விழா ஆக.11ம் தேதி உள்ளூர் விடுமுறை

சங்கரன்கோவில் ஆடித் தபசு விழா ஆக.11ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி : சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவையொட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயில் ஆடித் தபசு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி 2வது சனிக் கிழமை அலுவலக வேலை நாளாகும்.இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் விடுமுறையாக கருதப்பட மாட்டாது. உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார் நிலை கருவூலகங்கள் அனைத்தும் குறைந்தபட்ச அலுவலர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பான அவசர பணிகளை கவனிப்பதற்கான செயல்படும் என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !