கந்தசாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.16 லட்சம்
ADDED :3636 days ago
மாமல்லபுரம்: திருப்போரூர், கந்தசாமி கோவிலில், உண்டியல் மூலம், 15.81 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இக்கோவிலில், பக்தர்கள் காணிக்கை அளிக்க, 12 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஆறு உண்டியல்கள், கடந்த செப்டம்பர் மாதம், 10ம் தேதி திறக்கப்பட்டன. இதர, ஆறு உண்டியல்கள், கடந்த 20ம் தேதி திறக்கப்பட்டன.உதவி ஆணையர் பரணிதரன், ஆய்வாளர் கலைச்செல்வி, செயல் அலுவலர் நற்சோணை ஆகியோர் முன்னிலை யில், காணிக்கைகள் எண்ணப்பட்டன.கடந்த ஜூன் மாதம், 23ம் தேதி முதல், தற்போது வரை, 15,81,473 ரூபாய்; 67 கிராம் தங்கம்; 1.854 கி.கி., வெள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.