சந்தான வேணுகோபால சுவாமி கோவில் அடிக்கல் நாட்டு விழா
ADDED :3636 days ago
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஊத்துக்கோட்டை, தட்டாரத் தெருவில் இருந்தது சந்தான வேணுகோபால சுவாமி கோவில். 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவில், சமீபகாலமாக சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, பகுதிவாசிகள் பங்களிப்புடன், புதிதாக கோவில் கட்ட தீர்மானித்து, பழைய கோவில் கட்டடம் இடிக்கப்பட்டது. புதிதாக கோவில் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை நடந்தது. இதில் கணபதி பூஜை, பூமி பூஜை, கோ பூஜை நடத்தப்பட்டன. மேலும், பசு மாட்டிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.