உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவிலில் மகிஷாசுர வதம் செய்யும் நிகழ்ச்சி

சுகவனேஸ்வரர் கோவிலில் மகிஷாசுர வதம் செய்யும் நிகழ்ச்சி

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு, சண்டி ஹோமம் மற்றும் மகிஷாசுர வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், அக்., 13ம் தேதி முதல், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று விஜயதசமி விழாவை முன்னிட்டு, சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை ஸ்வாமிகளுக்கு, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, பூஜை நடந்தது. நேற்று மாலை, கோவில் வளாகத்தில், அமைக்கப்பட்டிருந்த மேடையில், மேலும் மகிஷாசுர வதம் நிகழ்ச்சியில், அம்மன் வேடம் அணிந்த பெண், மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நவராத்திரியின் போது நடந்த லட்சார்ச்சனை குங்கும பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !