கள்ளுகடை மேடு ஆஞ்சநேயர் கோவிலில் வித்யாரம்பம்
ADDED :3636 days ago
ஈரோடு: ஈரோடு கள்ளுகடை மேடு ஆஞ்சநேயர் கோவிலில் விஜயதசமியான நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. விஜயதசமி தினத்தன்று மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் செயல் பெற்றோர்களால் துவக்கி வைக்கப்படும். இந்த நாளில் எழுத்தறிவு பெற துவங்கினால் கல்வி சிறக்கும் என்பது ஐதீகம். இந்துதர்ம வித்யா பீடம் சார்பில் 14வது ஆண்டாக, நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி துவங்கியது. மழலைகளுக்கு பிரவண மந்திரத்தை காதில் ஓதி, நாக்கில் தேன் தடவி தங்க மோதிரத்தால் உயிர் எழுத்து எழுதப்பட்டது. மேலும் வாழை இலையில் பச்சரிசியை நிரப்பி உயிர் எழுத்துக்களை எழுத வைக்கப்பட்து. 28 மழலைகள் எழுத்தறிவை இக்கோவிலில் இருந்து நேற்று துவக்கினர். அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாநில துணை தலைவர் அத்ரிசாமிகள், எழுத்தறிவித்தலை துவக்கி வைத்தார்.