கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி வழிபாடு
ADDED :3695 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் விஜயதசமி வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி கன்னிகா பரமேஸ்வரி நவராத்திரி இறுதிநாள் வழிபாட்டில், கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. காலை பட்டாபிஷேகமும்., அம்மன் விரதம் முடிந்து, மகிஷாசுரமர்த்தினி ரூபத்தில் வதம் செய்ததை நினைவூட்டும் விதத்தில் அம்பு உற்சவமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடந்தது. இதேபோல் கமலா நேரு காமாட்சி அம்மன் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவிலிலும் நவராத்திரி 10ம் நாள் வழிபாடு நடந்தது.