முத்து குமாரசாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3643 days ago
ஈரோடு: ஈரோடு கோட்டை சின்னபாவடி முத்துகுமாரசாமி, கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த மாதம், திருப்பணி தொடங்கியது. அக்23., சனிக்கிழமை மாலை, புண்ணியாகவாஜனம், பூர்வாங்க பூஜை, கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேஷம்,ஹோம பூஜை, பூர்ணாஹூதி, தூப தீப நெய்வேத்தியம், தீபாராதனையுடன் முதல் கால பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் கால பூஜை. சத்ருசம்ஹார திரிசதி பாராயணம், வேத ஆகம திருமுறை, மூலிகை கனிவகை, தானியவகை, அன்னம், சவுபாக்ய மங்கள திரவிய ஹோமம், இரவு 9மணி., யந்திரஸ்தாபனம் செய்து, ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்றாம் கால பூஜை நடந்தது. இன்று காலை 8.45 மணிக்கு, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நிகழ்சிக்குப் பின், 9.45 மணிக்கு., கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.