உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், உலக மக்கள் நன்மைக்காக அதிகார நந்திக்கு நேற்று பால், சந்தனம், மஞ்சள் உட்பட, 16 வகையான மங்கள பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வேலூர் பெரிய அல்லாபுரம் நாலிங்கேஸ்வரர் கோவில், கொசப்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், காந்திநகர் சொர்ண முகீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாட்றம்பள்ளி அடுத்த வரதன் வட்டத்தில் உள்ள பஞ்ச பூத வசஷாதீஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், பஞ்ச பூத தத்துவத்தின் அடிப்படையில், 9 அடி உயர ருத்ராட்ட லிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சம் ருத்ராஷங்கள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனை நடந்தது. ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !