திருமலைராயப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
கோம்பை: கோம்பை மலையடிவார திருமலைராயப் பெருமாள் கோயிலில், பக்தர்கள் "நாராயணா என்ற கோஷம் முழங்க, கும்பாபிஷேக விழா நடந்தது. கோம்பை ராமக்கல்மெட்டு மலையடிவாரத்தில், அனந்த சயன கோலத்தில் சுயம்பு மூர்த்தியாக திருமலை ராயப்பெருமாள் அருள்பாலிக்கிறார். நேற்று இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கலெக்டர் வெங்கடாச்சலம் தலைமையில் நடந்தது. கோம்பை ஜமீன்தார் அப்பாஜி ராஜ்குமார், பி.டி.ஆர்.விஜயராஜன் முன்னிலை வகித்தனர். மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார். விழாவில் கோம்பை பேரூராட்சிபேரூராட்சி தலைவர் பவித்ரா கண்ணன், முன்னாள் தலைவர் கார்த்திகேயன், துணைத்தலைவர் கண்ணன், செயல் அலுவலர் கணேசன், கவுன்சிலர்கள் கதிரேசன், செல்வராணி, கூத்தனாட்சி, ரெங்கநாதன், ஆண்டவர் ஆசிரியர், தெய்வேந்திரன்.
எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் ரஹீம், சி.பி.ஏ., கூட்டுறவு சங்க தலைவர் அகமது நசீர், அ.தி.மு.க., நகர செயலாளர் நடராஜன், ஐயப்பன் கோயில் பெரிய குருசாமி பெரியாழ்வார், குருசாமிகள் கோபால், முத்துச்சாமி, ரங்கு, செயலாளர் திருப்பதி, துணைச்செயலாளர் மெத்தை ராஜூ, பொருளாளர் கண்ணன், துணைப்பொருளாளர் கதிரேசன், கமிட்டி நிர்வாகிகள் ராஜாராம், மணிமாறன், தேங்காய் மொத்த வியாபாரிகள் கணேசன், பவுன்ராஜ், ச.ம.க., மாவட்ட செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் மகிமைராஜ், தேவாரம் பேரூர் செயலாளர் பாரத்.
அருள்தரும் சக்திவேல் மணி மண்டப நிர்வாகிகள், கொடுமுடி தீர்த்த காவடி குழுவினர், நகுல செட்டியார் நிறுவனத்தினர், வாசவி ஜூவல்லர்ஸ் செந்தில்குமார், ரெங்கநாதம் ஜவுளி ஸ்டோர் உரிமையாளர் கல்யாண சுந்தரம், மணி கட்பீஸ் சென்டர் உரிமையாளர் மணிகண்ட பிரபு, மீனாட்சி பாத்திரக்கடை உரிமையாளர் நாகராஜன், பத்திர எழுத்தர்கள் ரங்கசாமி, சுந்தரபாண்டியன், நகர் காங்., கமிட்டி நிர்வாகி ராமராஜ், தேனி பி.எஸ்., கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.