ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்
ADDED :3662 days ago
ராசிபுரம்: ஐப்பசி பவுர்ணமியையொட்டி ராசிபுரம் கைலாசநாதர் ஸ்வாமி அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராசிபுரம் தர்மசம்வர்த்தினி உடனுரை கைலாசநாதர் கோவிலில், ஆண்டு தோறும் ஐப்பசியில் வரும் பவுர்ணமியில் நிரந்தர கட்டளைதாரர் சார்பில், கைலாசநார் ஸ்வாமிக்கு அன்னாபிஷே விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த அன்னாபி?ஷ விழாவில், மூலவரான தர்மசம்வர்த்தினி உடனுறை கைலாசநாதர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கைலாசநாதர் ஸ்வாமிக்கு, 100 கிலோ அன்னத்தால், அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்ட சாதத்தை பிரசதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.