கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
ADDED :3790 days ago
கரூர்: கரூர், பசுபதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் நடந்தது. இதில், கல்யாணபசுபதீஸ்வரர், நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்வாமிகள் திருமேனி முழுவதும் அன்னம் சாத்தி, அன்னாபிஷேகம் நடந்தது. பின், காய் கறிகளால் அலங்கரிக்கப்பட்ட மாலை சூட்டப்பட்டு சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதுபோல, கரூர் வஞ்சுலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.