ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3717 days ago
அன்னுார்: கிருஷ்ண கவுண்டன்புதுார் ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ண கவுண்டன்புதுாரில், பல ஆண்டுகளாக வழிபாடு செய்யப்பட்டு வந்த ஆதி விநாயகருக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. கோபுரம், கருவறை, முன் மண்டபம் கட்டப்பட்டு, விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, மூஷிக வாகனம், பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி முடிந்ததையடுத்து, கும்பாபிஷேக விழா, 25ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்றுமுன் தினம் அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. கலசங்கள் கோவிலை வலம் வந்தன. காலை, 8:35 மணிக்கு, கோபுரம், விநாயகர், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.