குகை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :3658 days ago
சிங்கம்புணரி: அரளிப்பாறை குகை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. மலை குகையி லுள்ள சிவபெருமானுக்கு பால், பன்னீர் சந்தனம் அன்னாபிஷேகம் தீபாராதனை நடந்தது. கிரிவலக்குழு தலைவர் ஜெயராமன் தலைமையில் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
* முறையூர் மீனாட்சிசொக்கநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு பால், திருமஞ்சனம் அன்னாபிஷேகம் உட்பட 21 அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப் பட்டது. கோயில் கவுரவ கண்காணிப்பாளர் மாணிக்கம்,கிராமத்தினர் பங்கேற்றனர்.