குரு சித்தானந்தா கோவில்களில் அன்னாபிஷேகம்
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேகம் நேற்று நடந்தது.இதனை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, இரவு 7.00 மணிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா நடந்தது.காலை 9.00 மணிக்கு மூலநாதர், வேதாம்பிகை, பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இரவு 7.00 மணிக்கு, மூலநாதர் சுவாமிக்கு, அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்து அன்னாபிஷேகம் நடந்தது. இரவு 8.00 மணிக்கு அன்னம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் வெங்கடா சலம், நடராஜன், கணேசன், கல்விக்கரசன், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், பாபு செய்திருந்தனர்.