உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்

நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. மனிதனின் பசியைப் போக்க உணவளிக்கும் சிவ பெருமானைக் குளிர்விக்க ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். நெல்லிக்குப்பம் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் செய்து அன்னத்தால் அலங்கரித்தனர். பூஜை முடிந்ததும் சிவன் மேல் இருந்த அன்னத்தை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். அம்மன் சந்தனக்காப்பு அலங்காராத்தில் அருள்பாலித்தார்.  பூலோதநாதர் கோவில் மற்றும் கீழ்பட்டாம்பாக்கம் ஓசூர் அம்மன் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கும் அன்னாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !