உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் வெ.மலையில் ஆடிக்கிருத்திகை கோலாகலம்

கரூர் வெ.மலையில் ஆடிக்கிருத்திகை கோலாகலம்

கரூர்: கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் நடந்த ஆடிக் கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமிகும்பிட்டனர். கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. வெங்கமேடு பொதுமக்கள் ஆடிக்கிருத்திகை குழுவினர் சார்பில் பால் குடம் ஊர்வலம் காமாட்சியம்மன் கோவிலில் இருந்து தொடங்கியது. ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து சென்றனர். பின்னர் வெண்ணைமலை முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கரூர் வெங்கமேடு ஆடிக்கிருத்திகை குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !