மாரியம்மன் விழா தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :3630 days ago
ஓமலூர்: ஓமலூர், பெரியகாடம்பட்டி சக்தி மாரியம்மன், வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தனர். ஓமலூர் பெரியகாடம்பட்டியில் வலம்புரி விநாயகர், சக்தி மாரியம்மனுக்கு புதிய சன்னதியும், புதிய சிலைகளும், சிற்ப சாஸ்திர கல்ஹார திருப்பணி செய்து, புதிய விமானங்கள் அமைக்கப்பட்டு, வரும், 2ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், கஜபூஜை, அஷ்வபூஜை, கோபூஜை செய்து, கோபுர கலசம், புனித தீர்த்தம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீர்த்தக்குடம் சுமந்து, ஊர்வலமாக வந்தனர். கோவில் வளாகத்தில் பூஜைகள், ஹோமங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.