உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்!

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. ஐப்பசி மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரத்திலிருந்து மகம் நட்சத்திரம் வரையுள்ள 7 நாட்கள் வரை இந்த ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். வெளிபிரகாரத்தில் ஆண்டாள்,ரெங்கமன்னார் தினமும் இரவு 7 மணியளவில் ஊஞ்சலில் எழுந்தருள்வர். அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் திருவாய்மொழி சேவகாலம்நடக்கும். இதில் தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, அனந்தராமகிருஷ்ணன் பட்டர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !