சத்யசாய்பாபா பிறந்த நாள்: இசை சமர்ப்பணம் நிகழ்ச்சி!
ADDED :3628 days ago
புதுச்சேரி: சத்யசாய் பாபாவின் 90வது பிறந்தநாள் விழாவையொட்டி இசை சமர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது. சத்யசாய் பாபாவின் 90வது பிறந்த நாள் விழா வரும் 23ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சத்யசாய் நிறுவனங்கள் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. புதுச்சேரி சத்யசாய் நிறுவனம் சார்பில் இசை சமர்ப்பணம் நிகழ்ச்சி காளதீஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சொசியெத்தே புரோகிரஸ்தே உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பெங்களூரு வித்யா, அர்ஷிதா வாய்ப்பாட்டிலும், வேதுளா, கிரன் ஆகியோர் வயலினும், ஸ்ரீதர் மிருதங்கத்திலும் பக்க வாத்தியம் வாசித்தனர். சாய்பாபாவின் மகிமைகள் குறித்த தெய்வீக பாடல்களால் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை நரசிம்மன், சீத்தாராமன் செய்திருந்தனர்.