உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை கன்னியம்மன் கோவிலில் பூஜை

ஊத்துக்கோட்டை கன்னியம்மன் கோவிலில் பூஜை

ஊத்துக்கோட்டை: கன்னியம்மன் கோவிலில் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.ஊத்துக்கோட்டை, பூந்தோப்பு பகுதியில் உள்ளது சப்த கன்னியர் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு, புதிதாக வர்ணம் பூசப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, காலை, 10:30 மணிக்கு, ஏழு கன்னியர்களுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !