பூஜையின்போது கற்பூரம் பயன்படுத்துவதன் நன்மை என்ன?
ADDED :3835 days ago
பொதுவாக பூஜையின்போதும், ஆரத்தி எடுக்கும்போதும் கற்பூரம் கொளுத்தி சுற்றிப் போடுவது வழக்கம். அவ்வாறு கற்பூரம் கொளுத்தும் போது உருவாகும் புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய பாசிடிவ் சக்தி உருவாகிறது. அந்த சக்தி நோய்கிருமிகளை அழித்து விடுகிறது. அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கிறது. கூடவே இறையருளையும் பெற முடிகிறது.