மூங்கில்துறைப்பட்டில் அன்னாபிஷேக விழா
ADDED :3626 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர் பாலமுருகன் கோவிலில் பாலமுகிலேஷ்வரருக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, பாலமுருகன் கோவிலில் அமைந்துள்ள பாலம்பிகை சமதே முகிலேஷ்வரருக்கு கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், கலசப் பூஜை மற்றும் சொர்ணா அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு முகிலேஷ்வரருக்கு காய்கள், பழங்கள் மற்றும் அன்னத்தால் அலங்காரம் செய்தனர். சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. விழா வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.