உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் திரு அகவல்

கோயில் திரு அகவல்

நினைமின் மனனே! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க!

10. பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்:
தோன்றின் மறையும் மறைந்தன தோன்றும்:
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்:
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்:
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்:

15 அருந்தின மலமாம். புனைந்தன அழுக்காம்:
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்:
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை: அன்றியும்:
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும் அனைத்து நினைக்கொன்றன.

20. தின்றனை அனைத்தும் அனைத்து நினைத் தின்றன
பெற்றனை அனைத்தும் அனைத்து நினைப் பெற்றன:
ஓம்பினை அனைத்தும் அனைத்து நினை ஓம்பின:
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை:
கவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை:

25. இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை:
ஒன்றொன்று ஒழியாது உற்றனை: அன்றியும்
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை: இதனுள்

30.பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி:
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி:
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி:
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி:

35. சலமும் சீயும் சரியும் ஒருவழி:
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து.
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை.

40. ஒழிவருஞ் சிவபெரும் போகஇன் பத்தை.
நிழலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபரம் அற ஒரு

முதல்வனைத் தில்லையுள் முனைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சிவனை.
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிபெருமானைச் செம் பொனம்பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே!

கோயில் திரு அகவல் - 2

5. காதள வோடிய கலகப் பாதகக்
கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்
காதலும் கருத்தும் அலலால்நின் இருதாள்
பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்
சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து.

10. அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை: இருவினைப் பெட்டகம்:
வாதபித் தம் கோழை குடிபுகுஞ் சீறூர்:
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை:

15. நாற்றப் பாண்டம் நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம்: பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய கடலைத் திடருள்:
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்:
ஓயா நோய்க்கிடம்: ஓடும் மரக்கலம்:

20. மாயா விகாரம்: மரணப் பஞ்சரம்:
சோற்றுத் துருத்தி: தூற்றும் பத்தம்:
காற்றில் பறக்கும் கானப் பட்டம்:
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை:
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை:

ஈமக் கனலில் இடுசில விருந்து:
காமக் கனவில் கருகும் சருகு:
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி.
பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழு கொம்பு:
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்

30. பிணமாய்க் கிடக்கும் பிண்டம்: பிணமேல்
ஊரில் கிடக்க வொட்டா உபாதி:
கால் எதிர் குவித்தபூளை: காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்:
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்:

35. அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;
நீரில் குமிழி: நீர்மேல் எழுத்து:
கண் துயில் கனவில் கண்ட காட்சி:
அதனினும் பொல்லா மாயக் களங்கம்:
அமையும் அமையும் பிரானே! அமையும்.

இமைய வல்லி வாழிஎன் றேத்த
ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டுகொண்டருள்கை நின் அருளினுக்கு அழகே!

கோயில் திரு அகவல் -3

5. பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்!
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்
கால்எடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்
உலகு அடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து

10. இடக்கையில் அடக்கிய இறைவ! நின் அடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் அடைக்கலம்:
ஐய! நின் அடைக்கலம்: அடியன் நின் அடைக்கலம்:
மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும்:
விழுப்பொருள் அறியா வழுக்குறு மனனும்:

15. ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும்
நிணவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும்:
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்.
தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்
கவடும் பொய்யும் கவடும் பெருஞ்சின

இகலும், கொலையும், இழிப்புற புன்மையும்,
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்
இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை:
உயிர் எனுங் குருகுவிட்டு ஓடும் குரம்பையை

25. எலும்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச்
செழும்பெழு உதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடல் குடத்தைப் பலவுடல் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்புக் குழியைக்

30. கொலைபடைக் கலம்பல கிடைக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை,
ஐம்புலப் பறவை அடையும்பஞ் சரத்தை:

35. புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றில் ஆடும்பம் பரத்தைக்
காசிற் பணத்திற் கழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயங்குந் திகிரியைக்,
கடுவெளி உருட்டிய சகடக் காலைப்

40. பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக்,
நடுவன்வந் தழைத்திட நடுங்கும் யாக்கையைப்
பிணமெனப் படுத்தியான புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்.

45 வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம்:
இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம்.

52 அடியார்க்கு எளியாய்! அடைக்கலம் அடைக்கலம்:
மறையவர் தில்லை மன்றுள்நின் றாடிக்
கருணை மொண்டு அலையெறி கடலே! அடைக்கலம்
தேவரும் முனிவரும் சென்றுநின்றேத்தப்
பாசிழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும்
எம்பெருமான் நின் இணை அடிக்கு அபயம்
அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !