உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லபை ஐயப்பன் கோயிலில் இறைவழிபாடுடன் கூடிய சமூகசேவை!

வல்லபை ஐயப்பன் கோயிலில் இறைவழிபாடுடன் கூடிய சமூகசேவை!

ரெகுநாதபுரம்: ஆன்மிகம் என்பதில் தனிமனித ஒழுக்கம், பிறருக்கு செய்யும் சேவைகள் இவற்றிற்கான அர்த்தம் பொதிந்துள்ளது. தான் மட்டும் வாழாமல் தம்மை சார்ந்து இருப்பவர்களும் குறைவின்றி நிறைவாக வாழ்வதற்கு துணைபுரியும் செயலை சப்தமில்லாமல் செய்துவருகிறது ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளை. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கும் பேட்டை துள்ளல், ஆராட்டு விழா  சிறப்பாக நடந்து வருகின்றன. கார்த்திகை முதல் மார்கழி வரை மண்டல நாட்களில் அன்னதானம் நடக்கிறது.

கோயிலின் தலைமை குருசாமி வல்லபை மோகன் கூறுகையில்
,“ பக்தியுடன் சேவை, சேவையுடன் பக்தி’ என்ற குறிக்கோளுடன் கடந்த 2005 முதல் ஐயப்பா சேவை நிலையம் இயங்கி வருகிறது. கி.பி.1710ல் ஆண்ட ராமநாதபுரம் மன்னர் முத்துவிஜய ரெகுநாதசேதுபதியால் அமைக்கப்பட்ட இக்கிராமத்தில் ஐயப்பன் கோயில் அமைந்த இடத்தில் முன்பு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்க்கப்பட்டு தேவேந்திரன் பூஜை செய்த இடமாகவும், சங்கிலி சித்தர் தங்கியிருந்த பகுதியாகவும் இருந்துள்ளது.

ஆதி விநாயகர் கோயிலாக இருந்து, பின்னர் வல்லபை ஐயப்பன், மஞ்ச மாதா கோயிலாக வழிபாட்டில் இருந்துவருகிறது. தினமலர் நாளிதழில் வரும் உயிர் காக்க உதவுங்கள் என்ற நிகழ்விற்கு ஏராளமான பக்தர்களின் கூட்டுப்பிரார்த்னையுடன் அருட்பிரசாதமும், உதவித்தொகையும் பயனாளிகளின் முகவரிக்கு அனுப்பி வைத்து வருகிறோம். ரத்ததானம், கண்தானம் இவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஆதரவற்றோர், ஏழை முதியவர்களை வரவழைத்து புத்தாடை, இனிப்பு வழங்கி அவர்களுடன் தீபாவளி கொண்டாடப்படுகிறது. உதவி செய்வோர் உள்ளத்தில் இறைவன் எப்போதும் அமர்ந்திருப்பான் என்றார்.

தொடர்புக்கு: 94437 24342.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !