லோகசாய்ராம் தியான பீட 16ம் ஆண்டு விழா
ADDED :3647 days ago
சென்னை: பெரும்பாக்கத்தில் உள்ள, லோகசாய்ராம் தியான பீடத்தின், 16ம் ஆண்டு விழா, இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, லோகசாய் பாபாவுக்கு லட்சார்ச்சனையும், சிறப்பு அன்னதானமும் நடக்க உள்ளது. இன்று காலை, 4:30 மணி முதல், காலை 11:00 மணி வரை, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை போன்ற வைபவங்கள் நிகழ உள்ளன.தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு, சிறப்பு அன்னதானமும்; மாலை, 6:30 மணிக்கு, சிறப்பு தீப அலங்கார பூஜையும் நடக்க உள்ளன.