உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

திருப்புத்தூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பகுதி கோயில்களில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
நடந்தது. திருத்தளிநாதர் கோயிலில் நாடு நலம்பெற வேண்டி, கூட்டு பிரார்த்னை நடந்தது.
திருமுருகன் திருப்பேரவையினர் ஏற்பாடுகளை செய்தனர். காலை 9 மணிக்கு ராஜா, ரமேஷ்
குருக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். திருத்தளிநாதர், சிவகாமி அம்மன், யோக பைரவர், முருகன் சன்னதிகளில் பக்தர்கள் பஜனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !