சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் குபேர ஹோமம்
ADDED :3659 days ago
சென்னை: பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவிலில், தீபாவளியை முன்னிட்டு குபேர ஹோமத்துடன் இரண்டு நாள் பூஜைகள் நடக்கின்றன. பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோவிலில், தீபாவளி பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இன்று காலை, 6:30 மணி முதல் தரிசனம் துவங்குகிறது. அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு சிறப்பு பூஜையும்; நண்பகல், 12:00 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கின்றன. மாலை, 4:00 மணிக்கு சிறப்பு அலங்கார தரிசனம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கின்றன. அதை தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு சயன பூஜையும், நாளை குபேர ஹோமத்துடன், லட்சுமி பூஜையும் நடக்கின்றன.