உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் கைலாசநாதர் கோவில் கேதார கவுரி விரதம்

ராசிபுரம் கைலாசநாதர் கோவில் கேதார கவுரி விரதம்

ராசிபுரம்: ராசிபுரம் தர்மசம்வர்த்தினி உடனுரை கைலாசநாதர் கோவிலில், நேற்று கேதார கவுரி விரதம் பூஜை நடந்தது. பெண்கள், சூரிய உதயத்திற்கு முன் புனித நீராடி, கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்ளவர். தொடர்ந்து விரதத்தை மேற்கொள்ளவர். அம்பாளுக்கு மூங்கிலால் செய்யப்பட்ட புதிய முறத்தை நன்கு சாணமிட்டு மெழுகி, மஞ்சள், குங்குமம் இட்டு அதில் வாழை இலை வைத்து, அதிரசம், சீடை, மஞ்சள் கயிறு, பூ உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்து அம்பாளை வழிபட்டனர். கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு, மூலவர் கைலாசநாதர் சொர்ண அலங்காரத்திலும், தர்மசம்வர்த்தினி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ராசிபுரம் நகரில் உள்ள ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்று அம்பாள் அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !