உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கேதார கவுரி விரதமிருந்த பெண்கள்

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கேதார கவுரி விரதமிருந்த பெண்கள்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கேதார கவுரி விரமிருந்த பெண்கள், புரோகிதர் வீட்டில் அம்மனுக்கு படையலிட்டு வழிப்பட்டனர். தீபாவளிக்கு மறுநாள் வரும் அமாவாசை நாளன்று, கேதார கவுரி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. கணவன் நீண்ட ஆயுளுடன் வாழவும், குடும்பத்தில் சுபிட்ஷம் ஏற்படவும், பெண்கள் விரதத்தை மேற்கொள்கின்றனர். திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று காலை முதல் பெண்கள் விரதம் மேற்கொண்டனர். இதில் பலர், புரோகிதர்களான முரளி, பாஸ்கர் ஆகியோரின் வீட்டிலும், சிலர் கோவில்களிலும் படையலிட்டு, கேதார கவுரி அம்மனை வழிபட்டனர். புதிய மண் சட்டியில் 21 எண் ணிக்கைகளில் அதிரசம், நோன்பு கயிறு, விபூதி உருண்டை, சந்தனம், வெற் றிலை, பழம் உள்ளிட்ட பொருட்களை வைத்து படைத்து, விரதத்தை முடித்து, கயிற்றை கைகளில் அணிந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !