உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஸ்கான் கோவிலில் கோவர்த்தன பூஜை

இஸ்கான் கோவிலில் கோவர்த்தன பூஜை

கோவை: இஸ்கான் ஜெகநாதர் கோவிலில், இன்று மாலை, கோவர்த்தன பூஜை நடக்கிறது. தமிழகத்தில், சென்னை, கோவை, ஸ்ரீரங்கம், மதுரை, சேலம் உட்பட நகரங்களிலுள்ள ஹரே கிருஷ்ணா கோவிலில், தாமோதர மாத தீ உற்சவ நிகழ்ச்சிகள், வரும், 26ம் தேதி வரை நடக்கின்றன. இதை முன்னிட்டு, கோவை இஸ்கான் ஜெகநாதர் கோவிலில், இன்று மாலை, 5:00 மணி முதல், கோவர்த்தன பூஜை நடக்கிறது. கோமாதா வழிபாட்டுடன் துவங்கும் நிகழ்ச்சியில், பகவான் தாமோதரருக்கு, சாதம், இனிப்பு, கார வகைகள், பழங்கள், காய்கறிகள் கொண்ட உணவு பதார்த்தங்கள் படைக்கப்படும். இஸ்கான் மண்டல செயலாளர் வினோத சுவாமியின் சொற்பொழிவு நடக்கிறது. பக்தர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !