மருதமலையில் கந்த சஷ்டி இன்று கோலாகல துவக்கம்
ADDED :3659 days ago
கோவை : மருதமலை முருகன் கோவிலில், கந்தர் சஷ்டி விழா இன்று துவங்குகிறது. காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு புண்யாகம், பஞ்சக்கவ்யம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இறை அனுமதி பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. சஷ்டி விழாவை முன்னிட்டு, அடுத்த ஐந்து நாட்களுக்கும், முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஆறாவது நாளான, 17ம் தேதி யாகா சாலை பூஜையுடன் விழா துவங்குகிறது. மதியம், 2:45 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது.