வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இக்கோயிலில் திருவிழாக்களில் கந்தசஷ்டிவிழா முக்கியமானது. இங்குள்ள சுப்பிரமணியசுவாமிக்கு ஒருவாரம் விமரிசையாக விழா நடைபெறும். வ.புதுப்பட்டி, மகாராஜபுரம், கூமாப்பட்டி, கான்சாபுரம், சேதுநாராயணபுரம் உட்பட சுற்று கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கலைவிழா: விழாநாட்களில் சுவாமி ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 6ம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழாநாட்களில் சஷ்டி மண்டபத்தில் சஷ்டிப்பாராயணம், கலைவிழா நடைபெறுகிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட விழா இன்று (நவ.,12) துவங்குகிறது. நவ.,17 ல் முத்தாலம்மன் திடல் மைதானத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா அமைப்பாளர் கதிரேசன், பக்தர்கள் செய்துள்ளனர்.