பண்ணாரி அம்மன் கோவிலில் புடவை ஏலம்: பக்தர்கள் ஆர்வம்
ADDED :3660 days ago
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் குவிந்தனர். உச்சிகால பூஜை நேரத்தில், பக்தர்கள் கோவிலை சுற்றி, நீண்ட வரிசைகளில் நின்று, அம்மனை தரிசனம் செய்தனர். இந்நிலையில், கோவிலில் அம்மனுக்கு சாத்தப்பட்ட பட்டுப் புடவைகள் ஏலம் விடப்பட்டன. இவற்றை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதேபோல் சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவில், கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவில், வேணுகோபால்சுவாமி கோவில், தவளகிரி தண்டாயுதபாணி கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.