உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஐப்பசி அமாவாசை யாகம்

பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஐப்பசி அமாவாசை யாகம்

பனைக்குளம்: மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட உச்சிப்புளி அருகே சாத்தக்கோன்வலசை கிராமத்தில் மகா உக்கிர பிரத்யங்கிரா கோயிலில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு உலக நன்மைக்கான யாகம் நடந்தது. காலை 9 மணியளவில் மூலவருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சர்வ அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மகா யாகம் வளர்க்கப் பட்டு சக்தி ஸ்தோத்திரம், வேதமங்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பீடம், அறங்காவலர் பழனிவேலு வழிபாட்டுக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !